உண்டியல் சேமிப்பில் அதிக புத்தகங்கள் வாங்கிய பள்ளி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அக்.,22 முதல் நவ., 1 வரை 13வது புத்தகத் திருவிழா நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவர்களிடம் அதிக புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டும் விதமாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேமிப்பு உண்டியல் வழங்கப்பட்டன.

தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் சேகரித்த உண்டியல் பணத்தில் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.

அதன்படி சேமிப்பு உண்டியல் மூலமாக மாவட்ட அளவில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அதிகமான தொகைக்கு மாணவர்களை புத்தகம் வாங்கச் செய்து திண்டுக்கல் புனித மரியன்னைப் பள்ளி முதலிடம் பிடித்தது. இந்த ஆண்டு ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 160க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டன.

இதற்கான பரிசளிப்பு விழாவில் கலெக்டர் துர்கா, வேடசந்துார் எம்.எல்.ஏ., வீராசாமிநாதன் ஆகியோர் பங்கேற்று இப்பள்ளியின் ஆசிரியர் சாமிக்கு சுழற்கோப்பை வழங்கினர். இலக்கியக் களத் தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement