ஞானேஷ்குமார் மீதான லஞ்ச வழக்கு: விசாரணைக்கு உத்தரவிட்டது கேரள அரசு
நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் பொதுப்பணித் துறை செயலாளராக ஞானேஷ்குமார் பணியாற்றிய போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளுக்கான தொகையை விடுவிக்க, லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் சஜன், ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவில் சமீபத்தில் புகார் அளித்தார்.
அதன் விபரம்:
கடந்த 2006ல், கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ், மலேஷியாவைச் சேர்ந்த, 'பட்டிபெல்' நிறுவனம் மேற்கொண்ட சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடைந்தன.
இதற்காக 17 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு பொறியாளர்கள் ஒப்புதல் அளித்து இருந்தனர். ஆனால், அப்போதைய பொதுப்பணித் துறை செயலாளர் ஞனேஷ்குமார், அதற்கான காசோலையை விடுவிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க நிறுவன நிர்வாகம் மறுத்ததால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நெருக்கடி காரணமாக, 2006ல் மலேஷியாவைச் சேர்ந்த திட்ட பொறியாளர் லீ சீ பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், ஞானேஷ்குமார் லஞ்சம் கேட்டது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, 2006ம் ஆண்டில் நடத்தப்பட்ட விசாரணை போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டது. தற்போது, இந்த வழக்கு தொடர்பாக தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சகம், கேரளா ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
லஞ்ச பணத்துடன் சிக்கினார் உணவு பாதுகாப்பு அலுவலர்: ரூ.60 ஆயிரம் பறிமுதல்
-
வன்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
-
வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
-
ஆசிரியை படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆசிரியர்கள் மீது வழக்கு
-
உலக செய்திகள் சில வரிகளில்