லஞ்ச பணத்துடன் சிக்கினார் உணவு பாதுகாப்பு அலுவலர்: ரூ.60 ஆயிரம் பறிமுதல்
-நமது நிருபர்-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் கடைகள் மற்றும் பேக்கரி, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்வர். இவை தவிர கேட்டரிங் நிறுவனங்களும் ஆர்டர் எடுத்து உணவு தயாரிக்கின்றன.
பண்டிகையை பயன்படுத்தி கலப்படம், தரமற்ற இனிப்புகள் தயாரிப்பதை தடுக்க உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்வது வழக்கம். ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளே, பண்டிகை சீசனை பயன்படுத்தி வசூலில் ஈடுபடுவதுடன், கிலோ கணக்கில் இனிப்பு, காரங்களையும் இலவசமாக பெற்றுக் கொள்வதும் நடக்கிறது.
உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனா, சில தினங்களுக்கு முன் வெளியிட்ட உத்தரவில், இதுபோன்று இலவசமாக இனிப்புகளை பெறும் துறை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
'நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், நாங்கள் மாறுவதாக ஐடியாவே இல்லை' என்ற தோரணையில், இனிப்பகங்களில் லஞ்சம் பெற்ற உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் வசமாக சிக்கினார்.
புலியகுளம் பகுதி உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் ராமசாமிதான் சிக்கியவர்.
இவர் ஆறு ஸ்வீட் கடைகளில் ரூ.60,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, பிரபுதாஸ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர். ராமசாமி லஞ்சம் பெற்றது உறுதியானது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
'ஆறு கடைகளில் வசூலித்த பணத்துடன் அவர் இருந்த போது பிடிபட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்' என நமது நிருபரிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறினர்.
மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''லஞ்சம் பெற்றது குறித்து விசாரித்து அறிக்கை தயாரித்து, உணவுப்பாதுகாப்பு துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பாவம் அந்த உணவு ஆபீசர். லஞ்சம் வாங்கக் கூட விவரம் தெரியவில்லை.
என்ன கைது செய்து என்னத்துக்கு? ஆளைப் பொறுத்து மாறுபடும்.காவல் துறையில் லஞ்சம் வாங்கினால் ஒரு சிலரே கைது.அப்படி கைதானாலும் ஏதாவது காரணம் கூறி வெளியே விடப்படுகின்றனர்.மற்றவர் கள் வெறும் இடமாற்றம் தான்.
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க தூபம் போடுவது அவர்களின் வாகனம் ஓட்டும் சாரதி மற்றும் வாசலில் நிற்கும் சிப்பாய் பியூன் தான்.... இவர்களின் தவறான வழிகாட்டுததால் நேர்மையானவர்கள் கூட ஒருநாள் கூனி குறுகி நிற்க வேண்டிய நிலை....
அடுத்த வேளைக்கு சோறு கிடையாது, உடுத்த நல்ல துணி கிடையாது , ஊரு விட்டு ஊரு வந்து நல்லவன் மாதிரி நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து பலசரக்கு, பலகாரம், சோப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து பல பல கோடிகளை கலப்படம் இல்லாமல் , ஏமாற்றாமல் நியாயமாகவா இவர்கள் சம்பாதித்தார்கள்? வாடகை வீட்டையே தன் பெயருக்கு மாற்றி அருகில் உள்ள பல வீடுகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி தங்கள் ஏரியாவாக மாற்றி யார் ஆளும் கட்சியாக வந்தாலும் அவர்களுக்கு கட்சி நிதியை கொடுத்து சரி கட்டி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விட்டார்கள்..... புகார் மீது நடவடிக்கை எடுக்க வரும் இந்த மாதிரி தொப்பைகளுக்கு குப்பை காசு பத்தாயிரம் தருவதாக ஆசை காட்டி நாடக துறையிடம் போட்டு தருவது பழம் பெருச்சாளிகள் வேலை...... லஞ்சம் மட்டும் வாங்காமல் நியாயமாக அதிகாரிகள் நடந்தால் இந்த ஊரில் மாட்டுவண்டிகள் மட்டுமே பார்க்க முடியும்....
பிரபலமான உணவகத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு காரம் மற்றும் இனிப்பு வகைகளை படு வேகமாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள் அது தினசரி செய்தித்தாளில் கூட விளம்பரங்கள் வருகிறது.... சென்ற வாரம் என் நண்பர்களுக்கு வாங்கி கொடுத்தேன் இனிப்பில் அதிக உப்பு சர்க்கரை குறைவு .... தீபாவளிக்கு இரண்டு வாரம் முன்பு மற்றும் பின்பு வாங்காமல் தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது..... செய்யும் தவறுகளை சரி கட்டவே கை கூலி தருகிறார்கள்.... மீறி நடவடிக்கை எடுத்தால் பல இடங்களில் இருந்து அழுத்தம், சிபாரிசு வருகிறது என்ன செய்வார்கள் இந்த நேர்மையான அதிகாரிகள்..... தென்மாவட்ட மக்கள் பலர் கோவைக்கு வந்து பலகாரங்களை விற்று பல கோடிகளை அள்ளி விட்டார்கள்... அவர்களுக்கு அபராதம் கட்டுவது, லஞ்சம் கொடுப்பது பற்றி கவலை இல்லை.... வாங்கி திண்ற மக்களுக்கு காசு போயி, உப்பு, சர்க்கரை இரத்த அழுத்தம் கொழும்பு ஏறியது தான் மிச்சம்....
அரசாங்கம் சம்பளம் கொடுக்குது இல்ல. பிறகு எதுக்கு பிச்சை எடுக்கிறீங்க.
அனைத்து மாநிலங்களுக்கும் துக்காராம் போன்ற அதிகாரிகள்தான் தேவை ....
தொப்பையாப் பாரு... நல்லா வளத்திருக்காரு.
உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள். அப்போதுதான் அடுத்தவருக்கு பயம் இருக்கும்.
இந்த அரசு பதவியேற்று ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஒருவரைக்கூட டிஸ்மிஸ் செய்யவில்லை. இதில் இருந்தே இந்த அரசும் இலஞ்சத்தை பாதுகாக்க முனைகிறது என்று நம்ப வேண்டியுள்ளது
ஜி ஆர் டி இல் 20 கோடிகளுக்கு லஞ்சமாக தங்கம் வாங்கிய நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை.மேலும்
-
விலைவாசி உயர்வைக் கண்டித்து ஸ்பெயினில் பொதுவேலைநிறுத்தம்; போராட்டத்தில் வெடித்தது வன்முறை
-
இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒன்றிணைவார்கள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
-
விவசாயிகளே எங்களின் முதல் முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகள் விதித்தது ஈரான்
-
தமிழகம் முழுவதும் நுாலகங்களில் அப்புறப்படுத்தப்படும் போலி நுால்கள்!
-
சீன உளவாளியுடன் ரகசிய தொடர்பு; என்விடியா சி.இ.ஓ., பதவி பறிப்பு?