வன்தாராவில் உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு மாநாடு
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வனவிலங்கு மீட்பு மற்றும் பராமரிப்பு மையமான வன்தாரா வளாகம் உள்ளது. இங்கு, மிருக காட்சி சாலைகள் அமைப்பு சார்பில் 2026ம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு அக்டோபர் 26 முதல் 29 வரை நடந்தது.
' வனவிலங்கு பாதுகாப்புக்கான உலகளாவிய பங்களிப்பை வலுப்படுத்துதல் ' என்ற மையக்கருத்தை மையமாக கொண்டு இம்மாநாடு நடந்தது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 98 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், கால்நடை டாக்டர்கள், வினவிலங்கு ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 29 மிருக காட்சி சாலை அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். துவக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.
EARAZA அமைப்பு தலைவர் ஸ்வெட்லானா அகுலோவா, இந்திய அறிவியல் கழக பேராசிரியர் ராமன் சுகுமார் மற்றும் மத்திய மிருககாட்சி சாலை அமைப்பின் உறுப்பு செயலர் கிளெமென்ட் பென் ஆகியோர் மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
மேலும்
-
ஞானேஷ்குமார் மீதான லஞ்ச வழக்கு: விசாரணைக்கு உத்தரவிட்டது கேரள அரசு
-
ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
-
வீட்டு தாழ்ப்பாளை உடைத்து ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது
-
ஆசிரியை படத்தை ஆபாசமாக சித்தரித்த ஆசிரியர்கள் மீது வழக்கு
-
உலக செய்திகள் சில வரிகளில்
-
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பெருமாள் கோவில் நிலத்தை மீட்க குழு அமைப்பு