கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரியில் 'ட்ரோன்' பயிற்சி பள்ளி துவக்கம்
திருச்செங்கோடு; திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில், நாட்டின் முதலாவது என்.சி.சி., 'ட்ரோன்' பயிற்சி பள்ளி துவக்க விழா நடந்தது. டில்லி தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குனர் வீரேந்திர வாட்ஸ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன், சேலம் தேசிய மாணவர் படை, 5வது தமிழ்நாடு ஏர் விங் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். என்.சி.சி.,யின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் இயக்குனரக துணை தலைமை இயக்குனர் நம்பியாத் சுதீப் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான, முதலாவது இயக்குனரகங்களுக்கு இடையேயான, 'ட்ரோன்' போட்டி-2026ல் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அதையடுத்து, டில்லி தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குனர் வீரேந்திர வாட்ஸ் கூறுகையில், ''திருச்செங்கோட்டில் தொடங்கப்பட்ட, 'ட்ரோன்' பயிற்சி மையம், விமான போக்குவரத்து இயக்குனரகம், பாட அளவில் கொண்டு வந்த திட்டங்களை மேம்படுத்தி, சென்ட்ர் ஆப் எக்ஸலன்ஸ் அமைக்கப்படும். வாரத்தில், ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பலவிதமான ட்ரோன் பயிற்சிகளும் விரைவில்
அறிமுகப்படுத்தப்படும்,'' என்றார்.
மேலும்
-
மிரட்டியே பண வசூலித்தாரா அரசகுமார்? எனக்கு தெரியாது என்கிறார் மகேஷ்
-
ஆசியாவின் டாப் 100 பல்கலை பட்டியலில் ஐஐஎஸ்சி பெங்களூரு, 5 ஐஐடிக்கள்; முழு விவரம் இதோ!
-
போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம்: உச்ச நீதிமன்ற பதிவகம் எச்சரிக்கை
-
அனல் மின் நிலையங்களில் 1,400 மெகா வாட் உற்பத்தி பாதிப்பு
-
விடுதிகளில் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
-
விபத்தில் பலியான முதியவரின் உடல் தோண்டி எடுப்பு