ஓய்வூதியத்தை உயர்த்த பூஜாரிகள் கோரிக்கை
ஈரோடு;பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
அந்தந்த மாவட்ட அறநிலையத்துறை பெரிய கோவில் வருவாயில், மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிந்த கோவில்களில் தீபம் ஏற்றுதல், எண்ணெய், நைவேத்திய பொருட்கள், வஸ்திரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்க வேண்டும். பல கிராமங்களில், 12 ஆண்டுக்கு மேலாக கும்பாபிேஷகம் செய்யப்படாத கோவில்களை புனரமைத்து, கும்பாபிேஷகம் செய்ய வேண்டும். 60 வயது நிறைந்த பூஜாரிகளுக்கான ஓய்வூதிய திட்டம், 60 வயதுக்கு உட்பட்ட பூஜாரிகள் நலவாரிய திட்டத்தில் சேர்வதற்காக ஆண்டு வருவாய், 72,000 ரூபாயாக சான்று கோரப்படுகிறது. வருவாய் துறையினர் சான்று தர சிரமப்படுகின்றனர். எனவே அவ்விதியை ரத்து செய்து, ஓய்வூதியம், நலவாரிய திட்டத்தில் இணைப்பை வழங்க வேண்டும்.சிறுவயது முதல் கோவிலை நம்பி பூஜை செய்யும் பூஜாரிகளின் ஓய்வூதியம், 4,000 ரூபாயாக உள்ளதை, 5,000 ரூபாயாக உயர்த்தி, அவரது மறைவுக்கு பின், அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக கிடைக்க செய்ய வேண்டும். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பூஜாரிகள், அவர்களது குடும்பத்தாரை அடையாள அட்டையை காண்பித்து சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்
மேலும்
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
-
தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
-
தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்