கல்லறை திருநாள் அனுஷ்டிப்பு
நாமக்கல்; கல்லறை திருநாளான, நேற்று கிறிஸ்தவர்கள், இறந்த தங்களது உறவினர்கள் மோட்சமடைய வேண்டி, மெழுகுவர்த்தி ஏற்றி, பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும், நவ., 2ல், இறந்த தங்களது உறவினர்களை வழிபடும் வகையில், 'கல்லறை' திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்கின்றனர். பின், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இறந்த ஆத்மாக்கள் மோட்சமடைய வேண்டும் என்பதற்காக, பிராத்தனையில் ஈடுபடுவர். அதன்படி, நாமக்கல் அடுத்து மோகனுார் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள், காட்டுப்புத்துார் சாலையில் உள்ள புனித செல்வநாயகியம்மாள் ஆலய வளாக கல்லறையில் வழிபட்டனர். அதேபோல், ஆர்.சி.பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், இறந்தவர்களின் கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.முன்னதாக, பங்குத்தந்தை ஸ்டீபன் ராஜ் தலைமையில், காலை, 7:30 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறைகளில், கிறிஸ்தவர்கள், 'இறந்த தங்களது உறவினர்கள் மோட்சமடைய வேண்டும்' என, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு