கடன் உதவிக்கு சிறப்பு முகாம்

கோவை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க, ஏற்கனவே தொழில் நடத்தி வருபவர்கள் விரிவுபடுத்த வங்கி கடன் உதவிக்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நவ. 5ல் நடக்கிறது.

தொழில் வணிகத்துறை சார்பில், காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது. அரசின் சுயதொழில் மேம்பாட்டுத் திட்டங்களில் வங்கிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக தீர்வு காண்பது, புதிய தொழில் தொடங்க விரும்புவோரிடம் கடன் விண்ணப்பங்களை பெறுவது ஆகியவை முகாமின் நோக்கம்.

Advertisement