பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
கோத்தகிரி:
கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலாளாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார்.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பள்ளி மறுகட்டமைப்பு குழுவிற்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில், தலைவராக செல்வி, துணை தலைவர் உட்பட, மேலாண்மை குழுவிற்கு, 20 உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.
தொடர்ந்து, ‘நடப்பு கல்வியாண்டில், மாணவர்களின் தேர்ச்சிக்கும், பள்ளி மேம்பாட்டுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மறு கட்டமைப்பு குழு உறுப்பினர்கள் தொடர்ந்து பாடுபடுவது,’ என, முடிவெடுக்கப்பட்டது. மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் பீமன் நன்றி கூறினார்.
மேலும்
-
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் ‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்
-
பட்டா மாறுதலில் நீடிக்கும் குழப்பத்தால் மக்கள், வி.ஏ.ஓ.,க்களிடையே முரண்பாடு
-
கல்வித்துறை கூட்டங்களில் வருகைபதிவு செய்ய கியூ.ஆர்., கோடு அமல்: மாவட்டத்தில் புதிய நடைமுறை
-
குவாரிகளில் ‘ட்ரோன்’ ஆய்வு முடிவுகள் வெளியிட தயக்கம்
-
கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் முதலிடம்
-
பனசலாறு திட்டத்தில் 10 லட்சம் லிட்டர்குடிநீர் தேனி நகராட்சியில் வினியோகம்: குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தல்