நுகர்வோர் குறைதீர் ஆணைய காலியிடம் நிரப்ப வலியுறுத்தல்

கோவை: சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு, முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

சென்னையிலுள்ள மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மதுரை சுற்று அமர்வு ஆகிய இரண்டிலும் தற்போது உறுப்பினர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மதுரை அமர்வின் தலைவர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளதால், மாநில ஆணையத்தின் தலைவரே கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

கூடுதல் உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்தது. உறுப்பினர்கள் இல்லாததால் வழக்கமான விசாரணை, தீர்ப்பு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் அடிப்படை நோக்கமான, விரைவான நீதி கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு, ஒவ்வொரு ஆணையத்தின் காலியிட விவரங்களை வெளியிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து உறுப்பினர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement