கலர் கலரான ஆடைகளுக்கு கவரிங் அணிந்து கலக்கலாம்

தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியாச்சு... மேட்சாக நகை வாங்க போதிய பணம் இல்லையே என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது கவரிங் நகைகள்.

நாம் நினைக்கும் ஒற்றை செயினுடன் நிற்காமல், பல்வேறு வகைகளில் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், செயின், ஆரம், ஒட்டியாணம், கொலுசு... என பலவிதமான ஆபரணங்களுடன், பழங்கால வடிவமைப்பிலான ஆன்டிக் நகைகளும் கிடைக்கின்றன.

பார்ப்பதற்கு தங்க நகைகளைப் போலவே இவை இருக்கின்றன. கவரிங் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், நகைகளின் நிறம் மங்கினாலும் பாலிஷ் செய்து மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். பாலிஷ் செய்த பிறகு பார்ப்பதற்கு தங்க நகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு மெருகேறி விடுகின்றன.

ரூ.500 முதல் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. குறைந்த விலையில், நாம் விரும்பும் வடிவமைப்புகளில் நகைகளை வாங்கி அணிய முடிவதால், இந்த தீபாவளிக்கு கவரிங் நகைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

Advertisement