டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்

- நமது நிருபர்-




நீண்ட காலமாக, டில்லி சவுத் பிளாக்கில் செயல்பட்டு வந்த ராணுவம் மற்றும் கடற்படை தளபதி அலுவலகங்கள் அங்கிருந்து இடம் மாற உள்ளன.

ராணுவத்துக்கு என டில்லி கண்டோன்மென்ட் பகுதியில் சவுரிய பவன் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்து விட்டது. இந்த கட்டடத்திற்கு ராணுவ தலைமை தளபதி தீரஜ் சேத், ராணுவ துணை தளபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இம்மாத இறுதிக்குள் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கடற்படை தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன்,துணை தளபதி மற்றும் முதன்மை அதிகாரிகள் அலுவலகமும் சவுத் பிளாக்கில் இருந்து அதன் பின்னால் உள்ள சேனா பவனுக்கு மாற உள்ளது.

அதேபோல் ராணுவ கட்டுப்பாட்டு அறையும், டிஜிஎம்ஓ அலுவலகமும் தெற்கு பிளாக்கில் இருந்து மாற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் கர்தவயா பவனுக்கு மாறியுள்ளது. இங்கு தான் முப்படை தலைமை தளபதி அலுவலகம் செயல்படுகிறது. ராணுவ தளபதி அலுவலகம் சவுரியா பவனுக்கு மாற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாக மற்றும் ராணுவ அமைபபுகளை மறுசீரமைப்பு பணியில் இது மற்றொரு கட்டத்தை எட்டி உள்ளது.

Advertisement