சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி

மாலே: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித், 64, கைது செய்யப்பட்டார்.

தெற்காசிய நாடான மாலத்தீவில், அரசியல் செல்வாக்கு மிக்கவரும், பார்லிமென்ட் சபாநாயகராகவும், 2018 முதல் 2023 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அப்துல்லா ஷாகித். இவர் ஐ.நா., பொது சபையின் 76வது கூட்டத் தொடரின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக, சிறுமி ஒருவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷாகித்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து, ஷாகித் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப் பட்டார். தனக்கு எதிராக கூறப்படும் குற்றச் சாட்டுகள் உண்மையல்ல, அவை அவதுாறு என, ஷாகித் கூறியுள்ளார்.

வரும், 2028ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்துல்லா ஷாகித் கைது செய்யப்பட்டுள்ளார்.

@block_B@

மாலே, நவ. 4–



தெற்காசிய நாடான மாலத்தீவில், அரசியல் செல்வாக்கு மிக்கவரும், பார்லிமென்ட் சபாநாயகராகவும், 2018 முதல் 2023 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அப்துல்லா ஷாகித். இவர், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக, சிறுமி ஒருவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷாகித்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, ஷாகித் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.block_B

Advertisement