ரூ.35 கோடியில் பிரமாண்ட வளாகம் சிவசங்கரப்பா திட்டம்; ஈ.டி., தகவல்
பெங்களூரு: கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் தனது சொந்த ஊரில், 35 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்ட வளாகம் கட்ட திட்டமிட்டு இருந்ததாக, நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வக்கீல் கூறியுள்ளார்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, தேர்வுகளில் நடந்த முறைகேடு வழக்கில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், உறுப்பினர் கீதாவை, ஈ.டி., எனும் அமலாக்கத்துறை கைது செய்தது. இவர்கள் இருவரும் ஜாமின் கேட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் மகேஸ்வரி வாதிடுகையில், ‘‘தேர்வர்களிடம் இருந்து வாங்கிய பணத்தில், தனது சொந்த ஊரில் 35 கோடி ரூபாய் செலவில், பள்ளி, விடுதி, விளையாட்டு மைதானம், வணிக வளாகம், மாநாட்டு அரங்கம் அடங்கிய பிரமாண்ட வளாகத்தை கட்ட, சிவசங்கரப்பா திட்டமிட்டு இருந்தார்.
‘‘தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற ஒரு தேர்வரின் பெற்றோரை, தான் நடத்தும் பள்ளியின் பொறுப்பாளர்களாக நியமிக்கவும் அவர் முடிவு செய்தார்.
‘‘கால்நடை மருத்துவர் தேர்வில் முறைகேடு செய்த, தேர்வர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த தேர்வரிடம் இருந்து, கீதாவும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்,’’ என கூறினார்.
மனுதாரர்கள் தரப்பு வக்கீலும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். பின், மனு மீதான அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்
-
பிரிட்டன் கோர்ட் வழங்கிய விவாகரத்து செல்லாது இருதார மண வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
-
சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி
-
செய்திகள் சில வரிகளில்
-
கிரைம் கார்னர்: பெங்களூரு
-
முன்னறிவிப்பின்றி 2 ஏக்கர் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
-
ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்