செய்திகள் சில வரிகளில்

பெங்களூரு: கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை, நேற்று காலை விமர்சித்தார். இதை கண்டித்து, பெங்களூரில் உள்ள அவரது வீட்டின் முன், நேற்று இரவு காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு: வக்கீல்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு அறைக்குள் வக்கீல்கள் நேற்று நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை வெளியேற்றினர். வக்கீல்களின் செயலை கண்டித்த நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

Advertisement