முன்னறிவிப்பின்றி 2 ஏக்கர் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
ஷிவமொக்கா: ‘சொரபா காங்கிரஸ் பிரமுகரின் 2 ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த பாக்கு மரங்கள், அரசு நிலத்தில் விளைவித்ததாக கூறி, முன்னறிவிப்பின்றி அகற்றிய அதிகாரிகளை, பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா கண்டித்துள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம் சொரபா தாலுகா தியாவரேதெப்பா – வத்திகெரே கிராமத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் தொட்டமனே. இவர் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர். இவரின் குடும்பத்திற்கு பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இங்கு வந்த வருவாய் துறை, தாலுகா அதிகாரிகள், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி சாய்த்தனர்.
இதனால் வேதனை அடைந்த தேவராஜ் தொட்டமனே, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து விஷயத்தை கூறினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இத்தகவல் அறிந்த ஷிவமொக்கா பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா, கட்சியினருடன் அங்கு சென்று தேவராஜ் தொட்டமேனை சந்தித்து ஆறுதல் கூறினார். பின், அழிக்கப்பட்ட மரங்களை பார்வையிட்டபோது, தேவராஜ் தொட்டமனே கூறுகையில்,
‘‘என் சொந்த பிள்ளைகள் போன்று, 15 ஆண்டுகள் வளர்த்து வந்த மரங்களை, எந்த முன்னறிவிப்பு இல்லாமல், அதிகாரிகள் அகற்றிவிட்டனர். எனக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்துக்கு என் சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்களோ, தலைவர்களோ எந்த உதவியும் செய்யவில்லை,’’ என கூறி. கண்ணீர் விட்டு அழுதார்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பா.ஜ., – ம.ஜ.த., தலைவர்கள் கண்டித்து உள்ளனர்.
மேலும்
-
பிரிட்டன் கோர்ட் வழங்கிய விவாகரத்து செல்லாது இருதார மண வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி
-
சிறுமி பலாத்தார வழக்கில் ‘மாஜி’ அமைச்சர் கைது மாலத்தீவு போலீஸ் அதிரடி
-
செய்திகள் சில வரிகளில்
-
கிரைம் கார்னர்: பெங்களூரு
-
ரூ.35 கோடியில் பிரமாண்ட வளாகம் சிவசங்கரப்பா திட்டம்; ஈ.டி., தகவல்
-
ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்