மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாம்பியன்
ஓமலுார்; மாநில அளவிலான, 67வது குடியரசு தின தடகள போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.
சேலம், பெரியார் பல்கலையில் உள்ள சிந்தடிக் மைதானத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான, 67வது குடியரசு தின தடகள போட்டி கடந்த, 28ல் தேதி துவங்கி நேற்று நிறைவு பெற்றது. இதில், 38 மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என மொத்தம், 3,000 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, 11 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் வென்று, 76 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். தேனி மாவட்ட மாணவர்கள் அணி, 8 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்று, 55 புள்ளிகளை பெற்று இரண்டாமிடம் பெற்றனர்.சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவன் சீனிவாசன், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், சென்னையை சேர்ந்த கவுஷிக், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், தேனியை சேர்ந்த தரனீஸ் தட்டு எறிதல் போட்டி, தேனி மாவட்ட அணி, 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டி, 1,600 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல் உயரம் தாண்டுதல் போட்டி, விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் ஹேம்பிரசாத், 200 மீட்டர் ஓட்டப் போட்டி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சஷ்வந்த் தட்டு எறிதல் போட்டி, திருச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி, 1,600 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
இதேபோல் மாணவியர் பிரிவில் சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவி கனிஷ்கா அன்பரசன், 3,000 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்ட போட்டியிலும், சேலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மாணவி தீப்தசரன் 400 மீட்டர் ஓட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவி சகாயஜெமிமா, 400 மீட்டர் ஓட்டத்திலும் சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சேலம் கலெக்டர் இளம்பகவத் பரிசு வங்கினார். முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தகுமாரி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் கோபாலன், ஜெயலட்சுமி, சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) கண்மணி தேவி ஆகியோர்
பங்கேற்றனர்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்