தீபாவளி போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி; தற்காலிக சுமை துாக்குபவர், துப்புரவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஜனநாயக அங்காடிகள் சுமை துாக்குவோர் மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன், நேற்று அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.சி.சி.டி.யு., சுமை துாக்குவோர் மற்றும் பொது தொழிலாளர் மாநில தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் பெரியண்ணன், பெருமாள், பச்சியப்பன், ரகு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தர்மபுரி மண்டலத்தில், 9 வருடங்களுக்கு முன், வேலைக்கு சேர்ந்த சுமைதுாக்கும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, 2025 - 2026ம் வருடத்திற்கான போனஸ் வழங்க வலியுறுத்தினர்.
மேலும்
-
டில்லி சவுத் பிளாக்கில் இருந்து இடமாறும் ராணுவம், கடற்படை அலுவலகங்கள்
-
பேட்டரி சேமிப்புக் கொள்கை 2026; தமிழக அரசு வெளியீடு
-
சிக்கிள் செல் அனீமியாவை நொடியில் கண்டறிய எளிய தொழில்நுட்பம்: ஐ.ஐ.டி மும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
-
தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கு தொழில்நுட்பத் திறன்களும் தேவை; ராஜ்நாத் சிங்
-
தீபாவளியன்று எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும்? நேரம் குறித்தது தமிழக அரசு
-
தீபாவளிக்கு பின் 5 தொகுதி இடைத்தேர்தல்; தயாராகும் தேர்தல் கமிஷன்