காவேரிப்பட்டணம் பாலாஜி ஜூவல்லரியில் நகைகளுக்கு இலவச காப்பீடு திட்டம்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திலுள்ள பாலாஜி ஜூவல்லரி, 5 தலைமுறைகளை கடந்து நுாற்றாண்டை நெருங்கும் பாரம்பரிய பயணத்தில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக இலவச காப்பீடு திட்டத்தை செயல்
படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பாலாஜி ஜூவல்லரி உரிமையாளர் வெங்கடேஷ் ரமேஷ்குமார் கூறியதாவது: எங்கள் ஜூவல்லரியில், 5 தளங்களில் ஒவ்வொருக்குமான தனித்தனி பிரிவுகளை துவக்கி உள்ளது. அதில், பெண்களுக்கான பிரத்யேக நகைப்பிரிவு, ஆண்களுக்கான நகை, தாலி நகைகள், திருமண நகைகள், வைர நகைகள் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தனிப்பிரிவுகள் உள்ளன.
எங்களது கடைக்கு பெரும்பாலும், கிராமபுற வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ள நிலையில், அவர்கள் வாங்கும் நகைகளுக்கு, பாதுகாப்பு வழங்க நீண்ட நாட்களாக திட்டமிட்டோம். தற்போது, தமிழகத்திலே முதல் முறையாக, நகை வாங்கும்போது காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம், 2 பவுனுக்கு மேல் தங்கம் வாங்கும் அனைவருக்கும், ஓராண்டுக்கு இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.
அனைத்து தங்க நகைகளும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பி.ஐ.எஸ்., ஹால்மார்க் எச்.யு.ஐ.டி., அடையாளத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. மனிதர்களின் கைரேகை போல ஒவ்வொரு நகைக்கும் தனித்துவமான எச்.யு.ஐ.டி., எண் இருப்பதால், நகையின் தரம் மற்றும் துாய்மையை, வாடிக்கையாளர்கள் துல்லியமாக உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement