கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை!

டிசம்பர் 1ம் தேதி முதல் கொடைக்கானல் மலைச்சாலையில் 12மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குறுகலாகவும், அதிக வளைவுகளும் கொண்ட சாலைகள் கொடைக்கானலில் அதிகம் உண்டு. அதிக நீளம் கொண்ட வாகனங்கள் செல்லும் போது கடும் போக்குவரத்து ஏற்படுகிறது.

நெரிசலை தவிர்க்கவும், விபத்துகள் நேராவண்ணம் தடுக்கவும் கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து கலெக்டர் உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த தடை அமலாகிறது. அதன்படி, தனியார் சொகுசு பஸ்கள், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், வணிகர்கள் சிறிய வேன்கள். பஸ்கள், இலகு ரக சரக்கு வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

Advertisement