அமெரிக்க மக்கள் விரும்பிய 'முதல்முறை'.... தேர்தல் முடிவில் எதிரொலித்த விஷயத்தை கவனித்தீர்களா?
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் இரு அவைகளிலும் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. செனட் சபையில் மொத்தம் உள்ள 100 தொகுதிகளில் 54 இடங்களில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 224 இடங்களிலும், டிரம்பின் குடியரசு கட்சி 134 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தலில் கருப்பின பெண் கவர்னராகவும், ஓரின சேர்க்கையாளர் செனட் எம்பியாகவும், முஸ்லிம் எம்பி என பல தரப்பினரும் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளனர்.
முதல் கருப்பின பெண் கவர்னர்
அட்லாண்டாவின் முன்னாள் மேயரான கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், ஜார்ஜியா மாகாணத்தின் முதல் பெண் கவர்னர், முதல் கருப்பின கவர்னர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்க வரலாற்றிலேயே முதல் கருப்பின பெண் கவர்னராக இவர் தேர்வாகியுள்ளார். இவர், அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளர் ரிக் ஜாக்சனைத் தோற்கடித்தார்.
முதல் ஓரின சேரிக்கையாளர்
அமெரிக்க வரலாற்றில் ஓரின சேர்க்கையாளரான கிறிஸ் பாப்பாஸ் முதல்முறையாக செனட் சபைக்கு தேர்வாகியுள்ளார். நியூ ஹாம்ப்ஷயரில் குடியரசு கட்சி வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். இவர், நியூ ஹாம்ப்ஷயரின் தென்கிழக்கு தொகுதியில் இருந்து 4 முறை பிரதிநிதி சபை எம்பியாக இருந்துள்ளார்.
முதல் கருப்பின கவர்னர்
புளோரிடா மாகாணத்தின் முதல் கருப்பின கவர்னராக பைரன் டொனால்ட்ஸ் தேர்வாகியுள்ளார். இவருடன் சேர்த்து அமெரிக்காவில் தற்போது மூன்று கருப்பின கவர்னர்கள் பதவி வகிக்க உள்ளனர். மேரிலாந்தின் வெஸ் மூர், ஜார்ஜியாவின் பாட்டம்ஸூம் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் பெண் செனட்டர்
தெற்கு கரோலினாவில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் அமெரிக்கச் செனட்டர் என்ற பெருமையை ஆனி ஆண்ட்ரூஸ் பெற்றுள்ளார். இவர், நியமன செனட்டர் டார்லைன் கிரஹாமைத் தோற்கடித்துள்ளார். 30 ஆண்டுகளாக குடியரசுக் கட்சி வசம் இருந்த தெற்கு கரோலினாவை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
முதல் ஸ்பெயின் வம்சாவளி கவர்னர்
12 ஆண்டுகள் கவர்னராக இருந்த குடியரசுக் கட்சியின் கிரெக் அபாட்டைத் தோற்கடித்து, டெக்சாஸின் முதல் ஹிஸ்பானிக் மொழி பேசும் (ஸ்பெயின் வம்சாவளி) ஜினா ஹினோஜோசா கவர்னராகப் பொறுப்பேற்கவுள்ளார். 1990க்கு பிறகு டெக்சாஸ் கவர்னராக தேர்வாகும் முதல் ஜனநாயகக் கட்சியினர் இவராவார்.
முதல் கருப்பின பெண் எம்பி
29 வயதான வழக்கறிஞரும், ஜனநாயக சீர்திருத்தவாதியுமான மெலட் கிராஸ், கொலராடோ மாகாணத்தின் 1வது தொகுதியில் வென்றுள்ளார். இதன் மூலம், அம்மாகாணத்தின் முதல் கருப்பின பெண் எம்பியாகவும் 'ஜென்-இசட்' தலைமுறையின் இளைய உறுப்பினராகவும் பார்லிக்கு செல்கிறார்.
முதல் முஸ்லிம் எம்பி
முன்னாள் அமெரிக்க ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் ஆடம் ஹமாவாய். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட நியூ ஜெர்சியின் 12வது தொகுதியில் வென்றுள்ளார். இந்த மாகாணத்தின் முதல் முஸ்லிம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல் பழங்குடியின பெண் எம்பி
நியூயார்க் மாகாணத்தின் 7வது தொகுதியில் கிளேர் வால்டெஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், இந்த மாகாணத்தின் முதல் அமெரிக்கப் பழங்குடியின பெண் எம்பியாகியுள்ளார்.
மிச்சிகனின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்
மிச்சிகன் மாகாணத்தின் 11வது தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெரமி மாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவர். இதன்மூலம், மிச்சிகன் மாகாணத்தின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் எம்பியாக ஆகியுள்ளார்.
முதல் பெண் கவர்னர்
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டாக்டர் ஏமி ஆக்டன், ஒஹையோ மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக தேர்வாகியுள்ளார். இவர் இந்திய வம்சாவளியும், அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளருமான விவேக் ராமசாமியைத் தோற்கடித்துள்ளார்.
முதல் லத்தீனோ கவர்னர்
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் கவர்னராக ஸ்பானிஷ் மொழி பேசும் (லத்தீனோ) சேவியர் பெசெர்ரா தேர்வாகியுள்ளார். இதன்மூலம், அந்த மாகாணத்தின் முதல் லத்தீனோ கவர்னராக செயல்பட உள்ளார். பைடன் நிர்வாகத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
முதல்முறை கர்மா என்றால் என்ன, அது எப்படி திரும்பி அடிக்கும் என்று ஆணவம் தலைவிரித்து ஆடிய ட்ரம்ப் அவர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும்.
அளவுக்கு மீறி ஆடினாலேயோ, குள்ளநரித்தனைகளில் ஈடுபட்டாலோ இப்படித்தான் நடக்கும் என்பதை புரிந்துகொண்டு கொஞ்சம் அடக்கத்துடன் அரசாளர்கள் இனிமேலாவது நடந்துகொள்ளவேண்டும். மக்கள் சக்திதான் ஒரு தலைவனின் சக்தி. மக்களின் எதிர்பார்ப்புதான் மக்களின் சக்தி. மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் மக்கள் தங்கள் தலைவனுக்குள் டெபாசிட் பண்ணி வைத்திருக்கும் தங்கள் சக்தியை எடுத்துவிடுவார்கள். அப்புறம் தலைவன் காற்று போன பலூன்தான்.
டிரம்ப் வலுவிழந்ததால் திரும்ப முதல்வராக ஆசை.
அமெரிக்காவில் முஸ்லிம் MP அது இனி அவர்கள் தலையெழுத்து. இங்கிலாந்து லண்டன் சேர்மன் ஒரு முஸல்மான்.
ஆனால் யாருமே சினிமா நடிகரோ - நடிகையோ - ஸ்டென்ட் அப் காமெடியானோ - இல்லை -
உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட - அதிபுத்திசாலி - நுண்ணறிவு கொண்ட ஜேம்ஸ்-பாண்டி கூட அங்கே ஏலேக்சனில் நிற்க துணிவில்லை - -
டெமக்ராட் கட்சி சுனாமி. ட்ரப்ம்ப்புக்கு எதிராக விழுந்த வோட்டு.
கியானேஷ்வர் அவர்கள் சூது இது
அவர் உடனே.பதவி.விலகவேண்டும். மீண்டும்.தேர்தல் நடத்தப்பட.வேண்டும். இண்டி கூட்டணி தீர்மானம்.
ட்ரம்ப் ஒழிந்தால் சரி
டிரம்ப் ஒரு மிகப்பெரிய நன்மையை செய்துள்ளார். அமெரிகாவின் உண்மையான குள்ளநரி முகத்தை வெளிப்படையாக உலகுக்கு காண்பித்தவர் டிரம்ப். இது எல்லோருக்கும் தெரியும். அதை வெளிப்படையாக செய்தவர் டிரம்ப் . என்ன இருந்தாலும் இன்னும் இரண்டு வருடம் அவர்தான் ஜனாதிபதி
A lame duck President for the next two years, who is going to be sent to the prison after his term.
ஆக டிரம்புக்கு இன்னும் கிறுக்கு பிடிக்கலாம் .மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்