பஸ் ஸ்டாண்டில் சடலம் கொலை செய்து வீச்சா?

பவானி:பவானி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள நிழற்கூடத்தில், 43 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று காலை கிடந்தது. பவானி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் வெள்ளித்திருப்பூர் அருகே கெம்மியம்பட்டி காலனியை சேர்ந்த அருள், 43; பந்தல் போடும் தொழிலாளி என்பது தெரிந்தது. உடலில் ரத்தக்காயம் இருந்ததால், கொலை செய்யப்பட்டாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement