சுற்றுச்சூழலை பாதுகாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருச்சி: சுற்றுச்சூழலை பாதுகாக்க, தன்னார்வ அமைப்பினர், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் மற்றும் பவுண்டேஷன் பார் நேச்சுரல் ரிசோர்சஸ் அண்டு சஸ்டைனபிலிட்டி (எஃப்.ஓ.என்.எஸ்.,) அறக்கட்டளை இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு சேவைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
கல்வி நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீண்ட கால மாற்றத்தை உருவாக்கி, நிலையான பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாத்தல், பசுமைச் சூழலை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த சேவைத் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
மேலும்
-
1,000 ஆண் குழந்தைகளுக்கு 1,010 பெண் குழந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலின விகிதம் உயர்வு
-
வெங்காய லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
-
விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
-
கனரக வாகனங்கள் ஓசூர் நகருக்குள் செல்ல தடை கூட்ட நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
-
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்