நுால் அறிமுகம்

மதுரை: மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் புரட்சிப்பாவலர் மன்றம் சார்பில் தமிழன் இளங்கோவின் 'தெற்கின் புத்தர்' நுால் அறிமுக விழா நடந்தது. செந்தமிழ் கல்லுாரி பேராசிரியர் அதிவீரபாண்டியன் வரவேற்றார். தலைவர் வரதராஜன் தலைமை வகித்து பேசுகையில், 'கேரள மக்களின் கல்வி, வேலைக்கும் அவர்களின் அடிமைத்தன்மை நீங்கவும் போராடியவர் நாராயண குரு' என்றார்.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, மதுரைத் திருவள்ளுவர் கழக தலைவர் கமலை விஜயராஜன், உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் பேசினர். மதுரை புரட்சிக்கவிஞர் பேரவை பாலன் நன்றி கூறினார்.

Advertisement