டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் ‘குடி’மகன்கள் தடுமாற்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், காலி மதுபாட்டில்களை ‘ஸ்கேன்’ செய்யும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 102 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இது தவிர, 10க்கும் மேற்பட்ட எப்.எல்., 2 போன்ற தனியார் மதுபான கடைகள் உள்ளன.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்கள் ஸ்கேன் செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பெறப்படும் காலி மதுபாட்டில்களையும் ஸ்கேன் செய்ய வேண்டுமென்ற திட்டம், சில தினங்களுக்கு முன், அமலுக்கு வந்துள்ளது. இதை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் டாஸ்மாக் பணியாளர்கள், மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘குடி’மகன்கள் மதுபானங்களை வாங்குவதற்காக தேடி செல்கின்றனர். இதனால், தனியார் மதுகடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பல தனியார் மதுக்கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சில ‘குடி’மகன்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது