அதிபர் டிரம்ப் அதிகாரத்துக்கு முடிவு கட்டுமா அமெரிக்க தேர்தல்?
அதிபர் டிரம்பின் கட்டுப்பாடற்ற அதிகாரத்துக்குக் கடிவாளம் போட காத்திருந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமெரிக்க தேர்தல் அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள். இதில் 2 ஆண்டுகள் முடிந்தவுடன் நடப்பது தான் இடைப்பருவத் தேர்தல். இதில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 435 பேர், செனட் உறுப்பினர்கள் 35 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 36 மாநிலங்களில் கவர்னர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 21 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி தோற்றாலும், அவரது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், செனட், பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்தால், அவரது அதிகாரத்துக்கு கடிவாளம் போட்டது போலாகி விடும். எனவே, இப்போது நடக்கும் தேர்தலானது, அதிபர் டிரம்பின் ஆட்சி மீதான கருத்துக் கணிப்பாகவே கருதப்படுகிறது.
உள்நாட்டில் விலைவாசி உயர்வு, ஈரான் மீதான போர், வெனிசுலா அதிபரை கைது செய்தது, ரஷ்யா - உக்ரைன் விவகாரம், பிற நாடுகள் மீது திடீர் திடீரென வரி விதிப்பது, ரத்து செய்வது என டிரம்ப் மீது நாட்டு மக்கள் குறை சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தலில் தன் கட்சி தோற்றுப் போனால் என்ன நடக்கும் என்பது டிரம்புக்கு தெரியும். அதனால் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பிரசார கூட்டங்களை நடத்திய டிரம்ப், தானே போட்டியிடுவதாக கருதி ஓட்டளிக்குமாறும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். டிரம்ப்பின் வீழ்ச்சியடைந்து வரும் செல்வாக்கைப் பயன்படுத்தி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் பெரும்பான்மையை கைப்பற்றி விடலாம் என ஜனநாயகக் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட இறுதிக் கருத்துக் கணிப்பின்படி, முக்கியமான 7 போட்டிக் களங்களில் 5ல் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அவற்றில், டெக்சாஸ், கன்சாஸ் ஆகியவையும் அடங்கும். இந்த மாநிலங்களின் வாக்காளர்கள் 1988 மற்றும் 1932க்குப் பிறகு செனட்டுக்கு ஜனநாயகக் கட்சியினரை அனுப்பவில்லை. ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக, முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று தீவிர பிரசாரம் செய்தனர்.
'தேர்தல் முடிவுகள் தங்கள் கட்சிக்குச் சாதகமாக அமையாவிட்டால் அவற்றை டிரம்ப் ஏற்பாரா' என்ற கேள்வியும் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு வேளை எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், அவர்கள் கொண்டு வரும் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற விட மாட்டேன் என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள், இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:30 மணி முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (7)
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
04 நவ,2026 - 17:18 Report Abuse
இந்திய ஜனநாயகத்துக்கும் அமெரிக்க ஜனநாயகத்துக்கும் உள்ள வித்தியாசமே அதிகாரம் மட்டுமெ இந்தியாவில் அதிகார கட்டுபாடு எம்பிகள் வாக்கில் ஆனால் அமேரிக்காவோ அதிபரின் வீடோ பவெர் உச்சம் அவர் என்ன நினைக்கிறாரோ அதனை செயல் படுத்தும் அதிகாரம். எனவே அனத்தும் ட்ரம்ப் கையில் தான் உள்ளது அவராக மாறீனால் தான் மாற்றம்... வேறு எதுவும் கட்டுப்படுத்த முடியாது ... இந்தியா அல்ல 0
0
Reply
Dum - ,இந்தியா
04 நவ,2026 - 10:12 Report Abuse
Right now I am in Chicago ,IL, United States watching NBC news. It s 1034 pm here and already people, I can see, celebrating the flip In favour of the democrats. 0
0
Reply
சண்முகம் - ,
04 நவ,2026 - 01:01 Report Abuse
ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றாலும், ட்ரமபின் ஆட்டத்தை நிறுத்த முடியாது. 0
0
Reply
Sivaagiri - ,இந்தியா
03 நவ,2026 - 22:44 Report Abuse
இங்கே எப்படி மோடியின் தோல்வியை , கனவு காணும் ராகுல் சோனியா முதற்கொண்டு கெஜாவால் மம்தா, போன்ற நூற்றுக்கணக்கான எதிர்கட்iசி தலைகள் போல , அங்கேயும் ,
ட்ரம்பின் தோல்வியை கனவு காணுகிறார்கள்... 0
0
Reply
RK - ,
03 நவ,2026 - 22:31 Report Abuse
டிரம்ப் தான் ஜெயிப்பார் ஏன் என்றால் 5௦௦௦டாலர் தருகிறார் . 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 நவ,2026 - 20:34 Report Abuse
முதலில் அவரின் அகங்காரத்திற்கு, ஆணவத்திற்கு முடிவுகட்டவேண்டும். 0
0
முருகன் - ,
03 நவ,2026 - 21:00Report Abuse
ஒரு .............. முடியாது 0
0
Reply
மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
Advertisement
Advertisement