தாய், குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் குற்றச்சாட்டு
மைசூரு: அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய், பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மைசூரு மாவட்டம் கே.ஆர்., நகர் தாலுகா மலளி கிராமத்தை சேர்ந்த மகேஷின் மனைவி சுஷ்மிதா, 28. இவர் கர்ப்பம் தரித்திருந்தார். பிரசவ வலி ஏற்பட்டதால் கே.ஆர்., டவுனில் உள்ள அரசு தாய், சேய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார்.
பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார். நேற்று காலை குழந்தை பிறந்த சிறிது நேரத்துக்கு பின், தாய் மற்றும் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த சுஷ்மிதாவின் குடும்பத்தினர், அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், ‘நேற்று அதிகாலை வலியால் துடித்த சுஷ்மிதாவுக்கு சரியாக மருத்துவம் பார்க்கவில்லை. அவர் வலியால் துடித்த போது, இது சாதாரண வலி என்று கூறிவிட்டு, மருத்துவர்கள் ஊசிபோட்டுவிட்டு சென்றனர்.
ஆனால், அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியிருந்தால், வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்போம். திடீரென இறந்துவிட்டதாக கூறுகின்றனர். அவரின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்’ என்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த கே.ஆர்., நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிசங்கர், மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் உரையாடினார்.
இவ்விஷயத்தில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது.
மேலும்
-
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் ‘டிஜிட்டல் ட்வின்’ கல்வி மாதிரி மையம்
-
பட்டா மாறுதலில் நீடிக்கும் குழப்பத்தால் மக்கள், வி.ஏ.ஓ.,க்களிடையே முரண்பாடு
-
கல்வித்துறை கூட்டங்களில் வருகைபதிவு செய்ய கியூ.ஆர்., கோடு அமல்: மாவட்டத்தில் புதிய நடைமுறை
-
குவாரிகளில் ‘ட்ரோன்’ ஆய்வு முடிவுகள் வெளியிட தயக்கம்
-
கோட்டைமேடு பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் முதலிடம்
-
பனசலாறு திட்டத்தில் 10 லட்சம் லிட்டர்குடிநீர் தேனி நகராட்சியில் வினியோகம்: குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்தல்