ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்

பெங்களூரு: ‘ஜனவரி 1ம் தேதி முதல் ஆறு ரயில்களுக்கு புதிய எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

 ரயில் எண் 20623 அசோகபுரம் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு மால்குடி தினசரி ரயில் மற்றும் எண் 20624 கே.எஸ்.ஆர்., பெங்களூரு – அசோகபுரம் மால்குடி தினசரி ரயில்கள், 2027 ஜன., 1 முதல் முறையே, 16123 மற்றும் 16124 ஆக மாற்றப்படுகிறது.

 எண் 22617 திருப்பதி – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு; எண் 22618 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – திருப்பதி வாரம் மூன்று நாட்கள் இயங்கும் ரயில்கள், 2027 ஜன., 1 ம் தேதி முதல் முறையே 16627 மற்றும், 16628 ஆக மாற்றப்படுகிறது.

 எண் 12201 லோகமான்ய திலக் முனையம் – திருவனந்தபுரம்; எண் 12202 – திருவனந்தபுரம் – லோகமான்ய திலக் முனையம் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் காரிப் ரத் விரைவு ரயில்கள், 2027 ஜன., 1ம் தேதி முதல் முறையே 16371 மற்றும் 16372 எண் ஆக மாற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement