டில்லி பேரணியில் த.வெ.க., ஆப்சென்ட்; ராகுல் அப்செட்

10

- நமது நிருபர் -

டில்லி பேரணியில் பங்கேற்குமாறு, த.வெ.க., அமைச்சர்களிடம், தமிழக காங்., முன்னணி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால், டில்லி பேரணியில் பங்கேற்காமல், த.வெ.க., புறக்கணித்து விட்டது.

தமிழகத்தில், காங்கிரசுடன் கூட்டணி; மத்திய பா.ஜ., அரசுடன் இணக்கம் என்பதையே, முதல்வர் விஜய் விரும்புகிறார். அதனால், 'இண்டி' கூட்டணி பேரணியில் பங்கேற்க, தன் கட்சியினருக்கு தடை விதித்து விட்டார். அதனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.

@block_B@

'மாஜி' தலைவர்கள் புறக்கணிப்பு



டில்லி பேரணியில், தமிழக காங்கிரசில் இருந்து, 1,500 பேர் வரை பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 750 பேர் தான் பங்கேற்றனர். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர், பங்கேற்கவில்லை.

ராகுல் தலைமையில், பேரணி நடந்தும் கூட, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் செல்வப்பெருந்தகை, தங்கபாலு, அழகிரி, கிருஷ்ணசாமி ஆகியோர் புறக்கணித்துள்ளனர். தமிழக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மட்டும் பேரணியில் பங்கேற்றுள்ளார்.block_B

Advertisement