மின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி

அம்பத்துார்: மின்சாரம் பாய்ந்து, 45 வயது பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 45; பெயின்டர். இவர், தன் உறவினர் ராமகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து, அம்பத்துார், ஆசிரியர் காலனி இரண்டாவது தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு, நேற்று காலை பெயின்ட் அடித்து கொண்டிருந்தார்.

அப்போது, மின் கம்பியில் அவரது கைது உரசியுள்ளது.

இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement