கால்வாயின் குறுக்கே கான்கிரீட் குழாய்கள் பூசிவாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

வாலாஜாபாத்: பூசிவாக்கம் ஏரி கால்வாய் குறுக்கே ராட்சத கான்கிரீட் குழாய்கள் போடப்பட்டு உள்ளதால், நீரோட்டம் தடைபட்டு மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், களியனுார் கிராமம் வழியாக, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும், பூசிவாக்கம் ஏரியில் கலக்கிறது.

இந்த 2 மீ., கால்வாயின் குறுக்கே, தனியார் வீட்டுமனைப் பிரிவினர் ராட்சத குழாய்கள் போட்டு, தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும், ஆகாயத்தாமரை கால்வாய் முழுதும் வளர்ந்து உள்ளது.

இதனால், மழைக்காலத்தில் பூசிவாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், தனி நபர் ஆக்கிரமிப்பால் கால்வாய் பறிபோகும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயின் குறுக்கே போடப்பட்ட கான்கிரீட் குழாய்களை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement