மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குடும்ப பிரச்னையில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்று புதைத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் இரண்டெல்லப்பாறையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் 36, கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா 32. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக சில வாரங்களுக்கு முன் கவுசல்யா மாயமானார். சந்தேகமடைந்த அவரது பெற்றோர், வீட்டிற்கு வந்து விசாரித்ததில் லாரன்ஸ் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர் மகள் மாயமானது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், லாரன்சிடம் விசாரித்ததில் கல்நுாத்தாம்பட்டி அருகே கவுசல்யா கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை ரிங்ரோடு பணிக்காக கொட்டப்பட்டுள்ள மணல் குவியலுக்குள் போட்டுவிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, ஆர்.ஐ., வினோத், அடியனுாத்து வி.ஏ.ஓ., சிவப்பிரதாப் முன்னிலையில் லாரன்ஸ் அடையாளம் காட்டிய இடத்தில் மண் அள்ளும் இயந்திரத்தால் தோண்டும் பணி நடந்தது.
3 நாட்களாக நடந்த தேடுதல் பணியில் 30 அடி ஆழத்தில் கவுசல்யாவின் கை எலும்பு, சேலை ஆகியன கிடைத்தது. இதையடுத்து லாரன்சை கைது செய்த போலீசார், கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்