சுகாதார விழிப்புணர்வு முகாம் சிறந்த கன்றுகளுக்கு பரிசு
மோகனுார்,:மோகனுார்
தாலுகாவிற்கு உட்பட்ட, மாடகாசம்பட்டி பஞ்.,
எம்.ராசாம்பாளையத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சிறப்பு
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் கன்றுகள் பேரணி
நடந்தது.
மண்டல இணை இயக்குனர் செல்வகுமார், உதவி இயக்குனர்
விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தனர். முகாமில்
மாடுகள், கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், நாய்கள் மற்றும்
கோழிகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை
பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை, தாது உப்பு கலவை வழுங்குதல் உள்ளிட்ட
பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கே.புதுப்பாளையம் கால்நடை உதவி
மருத்துவர் பிரேம்குமார், பாலப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் ராகவி
ஆகியோர், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிறந்த
கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்
சங்க செயலாளர் வேலுசாமி, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க
செயலாளர் அம்பிகா, ஆவின் கால்நடை மருத்துவர் கீர்த்தனா, சுற்று
வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்