எலச்சிபாளையத்தில் வணிகர் சங்க கூட்டம்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம்,
மல்லசமுத்திரம் பகுதிகளை சேர்ந்த வணிகர் சங்க பேரவை கூட்டமைப்பின்
சார்பில், எலச்சிபாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு, உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரி அசோக் தலைமை வகித்து பேசியதாவது:
தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும்
உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் மற்றும் உணவு தொழில் முனைவோர் உணவு
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தரமான
மூலப்பொருட்கள், சுத்தமான சமையல் எண்ணெய் மற்றும் பாதுகாப்பான
குடிநீரை பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிக்கும் இடம், பாத்திரங்கள்
மற்றும் உபகரணங்களை துாய்மையாகப் பராமரிக்க வேண்டும். உணவு
தயாரிப்பவர்கள் தனிநபர் சுகாதாரத்தை பேணுவதுடன், கையுறை,
தலைக்கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும்
தரநிலைகள் ஆணையத்தால், அனுமதிக்கப்பட்ட நிறமூட்டிகளை மட்டுமே,
உரிய அளவில் பயன்படுத்த வேண்டும். இனிப்பு, கார வகைகளை ஈ, துாசி
உள்ளிட்ட மாசுபாடுகள் படாதவாறு மூடி வைத்து, பாதுகாப்பாக பேக்கிங்
செய்ய வேண்டும். உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி,
தேவையான லேபிள் விபரம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் அல்லது
பதிவெண் ஆகியவற்றை முறையாக குறிப்பிட வேண்டும்.
உணவு பாதுகாப்பு
விதிமுறைகளை பின்பற்றி, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான
உணவு பொருட்களை வழங்க ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க
எலச்சிபாளையம் பேரமைப்பின் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் கோவிந்தன்,
பொருளாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி