தமிழ் - பிராமி எழுத்தில் தீபாவளி வாழ்த்து ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பிய மாணவி
நாமக்கல்:தமிழ்
பிராமி எழுத்தில், அஞ்சல் அட்டையில், தீபாவளி வாழ்த்துகளை எழுதி,
ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் உள்பட, 500 பேருக்கு அனுப்பி,
நாமக்கல் மாணவி அசத்தி உள்ளார்.
தமிழி அல்லது தமிழ் பிராமி என்பது,
பண்டை காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுத பயன்படுத்தப்பட்ட
ஒலிப்பியல், ஓர் எழுத்து முறைமையும், மேலும் தற்கால தமிழ் எழுத்து
முறைக்கு முன்னோடி எழுத்து முறையாகும்.
தமிழின் முன்தைய எழுத்து
வடிவங்களாக, தமிழி மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும்
குறிப்பிடப்படுகின்றன. 2,300 ஆண்டுகளுக்கு முன், இந்த பிராமி
எழுத்துகள், தமிழகத்தில் பயன்படுத்தினர்.
நாமக்கல்லை
சேர்ந்த ரமேஷ், தேவிகா தம்பதியரின், 2ம் வகுப்பு படிக்கும் மாணவி கோதை
வெண்பா, 6, தமிழ், பிராமி எழுத்தில் தீபாவளி வாழ்த்துகளை, அஞ்சல்
அட்டையில் எழுதி, ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், கல்வித்துறை
அமைச்சர், நாமக்கல் கலெக்டர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவன முதல்வர், உறவினர், நண்பர்கள், ஆதீனங்கள் என, 500 பேருக்கு
அனுப்பி உள்ளார். அந்த அஞ்சல் அட்டையில், பழங்குடி மக்களின் பாரம்பரிய
ஓவியமான, வார்லி படத்தையும் வரைந்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி