மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். முகாமில் அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ்குமார், காது, மூக்கு, தொண்டை டாக்டர் வாசவி, மனநல டாக்டர் ஜெயசீலன், கண் டாக்டர் காயத்ரி, முடநீக்கியல் டாக்டர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.

அதில் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 44 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. 16 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் இல்லை என சான்றளிக்கப்பட்டது.

Advertisement