ஆவினில் கலப்பு தீவனம் நிறுத்தம்: கால்நடை விவசாயிகள் ஏமாற்றம்
பொங்கலுார்: பெரும்பாலான கால்நடை விவசாயிகள் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆவின் சார்பில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் வழங்கப்படுகிறது. இது சில மாதங்களாக திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் கால்நடை விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொங்கலுார் ஒன்றியம், நொச்சிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி கூறியதாவது:
ஆவின் கூட்டுறவு சங்கத்தில் ஒரு மூட்டை கலப்பு தீவனம், 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில், 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலைக்கு தரமான தீவனம் வழங்கியதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது தீவனம் வழங்குவது, நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஆவினில் கலப்பு தீவனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
-
ஹிமாசல்லில் பாரா கிளைடிங் விபத்தில் சுற்றுலாப் பயணி பலி