உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு: 18 கடைகளுக்கு அபராதம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 18 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் நகரில் உள்ள இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, இனிப்பு பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது, சுகாதாரமில்லாமல் இனிப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுகாக 18 கடைகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 150 கிலோ இனிப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, உரிய உரிமம் இல்லாமல் இனிப்பு விற்பனை செய்த இரு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement