சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் நெரிசல்

சிவகங்கை: சிவகங்கை தாலுகா அலுவலக ரோட்டில் ஆக்கிரமித்து அதிகரித்துள்ளதோடு சந்தை நாளான இன்று (நவ.,4) ரோட்டின் இருபுறத்திலும் கடைகள் வைக்கப்படுவதோடு டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சிவகங்கையில் புதன்கிழமை தாலுகா அலுவலக ரோட்டில் வாரச்சந்தை நடக்கிறது. சிவகங்கை, மானாமதுரை, திருப்புத்துார், சிங்கம்புணரி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை இங்கு விற்பனை செய்ய வருகின்றனர். சந்தை வளாகத்தில் 172 காய்கறி கடைகள், 12 மீன் கடைகள் உள்ளது. வியாபாரிகளின் எண்ணிக்கையோ அதிகமாக இருப்பதால் சந்தை நாட்களில் தாலுகா அலுவலக ரோட்டின் இருபுறமும் கடை வைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். சந்தைக்கு வரும் பொதுமக்களும் தாலுகா அலுவலக ரோட்டின் இருபுறத்திலும் தங்களின் டூவீலரை நிறுத்தி விட்டு சந்தைக்கு செல்கின்றனர்.

இது தவிர இங்கு ஒரு சிலர் ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனரை தங்களின் கடையின் முகப்பு பகுதியில் வைத்துள்ளனர். இதனால் ரோட்டின் அளவு குறுகி விட்டது.

சந்தை நாட்களில் இந்த பகுதியை டூவீலர் மற்றும் காரில் கடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.முன்பு நகர் போக்குவரத்து போலீசார் சந்தை நாட்களில் இந்த பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வாகனங்களை கட்டுப்படுத்தினர். தற்போது யாரும் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

Advertisement