புதிய பஸ் இயக்கம்: கிராம மக்கள் வரவேற்பு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டையில் புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ்சிற்கு, கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலூர் - அன்னப்பன்பேட்டை வழித்தடத்தில் புதிதாக அரசு பஸ் இயக்க வேண்டுமென, பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில், புதிதாக அரசு பஸ் இயக்கப்பட்டது.

அதையொட்டி புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டை பகுதிக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு புதிய பஸ் வந்தது. புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ்ஸிற்க்கு பொதுமக்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement