விபத்தில் பலியான சிறப்பு எஸ்.ஐ.,க்கு அரசு மரியாதை
போடி: விபத்தில் பலியான போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., தங்கராஜ் உடலுக்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் அரசு மரியாதை செலுத்தினார்.
தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டி தங்கராஜ் 59. போடியில் போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., யாக பணியாற்றினார்.இவரது மனைவி பாமா 58, ஆசிரியை. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தங்கராஜ் தேனியில் நவ., 1ல் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 8:00 மணி அளவில் வீடு திரும்பினார். போடேந்திரபுரம் அருகே டூவீலரில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணம்பட்டியில் சிறப்பு எஸ்.ஐ., தங்கராஜ் உடலுக்கு எஸ்.பி., பிரவின்கவுதம், போடி டி.எஸ்.பி., முருகன் அஞ்சலி செலுத்தினர். போலீசார் மலர் வளையம் வைத்து, 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர்.
மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது