பிறந்தநாள் விழாவில் குழந்தையின் செயினை அபேஸ் செய்தவருக்கு வலை
சேத்தியாத்தோப்பு: பிறந்தநாள் விழாவில் குழந்தையின் செயினை பறித்த கார் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த பாலசிங்கம்–பரணிபிரித்தி தம்பதி. இவர்களது குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா கடந்த செப்டம்பர் 9ம் தேதி நடந்தது. விழாவிற்கு சிதம்பரத்தில் இருந்து வந்த உறவினரின் கார் டிரைவரான, செட்டிக்குளத்தை சேர்ந்த மனோஜ்குமாரிடம், பரணிபிரித்தி குழந்தையை கொடுத்துள்ளார்.
சற்று நேரம் கழித்த பின் மனோஜ்குமார், குழந்தையை பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, விழா முடிந்ததும் உறவினர்களை காரில் அழைத்து கொண்டு சென்று விட்டார்.
இந்நிலையில், குழந்தை கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை காணவில்லை. மனோஜ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, செயினை ஒரு மாதத்தில் தந்து விடுவதாக கூறினார். ஆனால், தற்போது மனோஜ்குமார் தான் செயினை எடுக்கவில்லை என கூறி, செயினை தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து குழந்தையின் தாய் பரணிபிரித்தி நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது