விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
செஞ்சி: செஞ்சியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செஞ்சி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் , தேசிய மாணவர் படை, செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்கத் தலைவர் கோகுல கிருஷ்ணன், தீயணைப்புத்துறை அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
காந்தி பஜார், கூட்ரோடு, திருவண்ணாமலை சாலை வழியாக நடந்த ஊர்வலத்தில் மாணவர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்களை முழங்கிச் சென்றனர். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது என உறுதிமொழியும் ஏற்றனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏழுமலை, தேசிய மாணவர் படை அலுவலர் குமரவேல் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், ராஜேந்திரன், நாராயணமூர்த்தி, கருணைவேல், விக்டோரியா மைக்கேல், டாக்டர் தர்மராஜ், சக்திவேலன், பாலசுப்ரமணியன், வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் ராஜகோபால், ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது
-
முதல்வர் வீடு அருகே பெண் குழந்தை மீட்பு
-
கீழ்ப்பாக்கத்தில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம்