வெங்காய லோடு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

ஓசூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒசப்பேட்டையில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றிய லாரி, தமிழகத்தின் மதுரைக்கு நேற்று சென்றது. மாலை, 5:00 மணியளவில் ஓசூரில் தர்கா அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. ஆனால் லாரியில் சென்ற மூவரும் சிறிய காயங்களுடன் தப்பினர். லாரிக்கு அடியில், நிறுத்தியிருந்த, 2 டூவீலர்கள் சிக்கி நசுங்கின.
லாரியில் இருந்து வெங்காய மூட்டைகள் சரிந்து சாலையில் விழுந்தன.
சிதறிய வெங்காயத்தை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர். ஓசூர் சிப்காட் போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரிசெய்தனர்.

Advertisement