விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும், மோடி அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஊத்தங்கரை வட்ட குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், ரவுண்டானாவில் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க வட்டச்செயலாளர் பாஞ்சாலராசன், மா.கம்யூ., கட்சியின் ஊத்தங்கரை வட்ட செயலாளர் சபாபதி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் லெனின், செயலாளர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement