கீழ்ப்பாக்கத்தில் தீக்காய சிறப்பு வார்டு தொடக்கம்

சென்னை: பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 25 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு இன்று (நவ.,4) தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் கவிதா கூறுகையில், “சிறப்பு வார்டில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என, தனித்தனி பிரிவுகள் உள்ளன. இதற்காக, 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர். இந்த சிறப்பு வார்டு, 10 நாட்கள் வரை செயல்படும்,” என்றார்.

Advertisement