குப்பை லாரி ஓட்டுநர்கள் ‘போனஸ்’ கேட்டு போராட்டம்
ஏழுகிணறு: தீபாவளி ‘போனஸ்’ தொகை கேட்டு, குப்பை அள்ளும் லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் இன்று (நவ.,4), வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், குப்பை அள்ளும் பணியில் ஏராளமானோர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஏழுகிணறு, பேசின் சாலையில் உள்ள ராயபுரம் மண்டல குப்பை லாரி பணிமனையில், ‘ராம்கி’ நிறுவனத்தின் 80க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், உதவியாளர்கள், 8.33 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு, இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மண்டல அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த ஏழுகிணறு போலீசார், சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை. இதையடுத்து, நிறுவன மனிதவள அதிகாரி பேச்சு நடத்தி, போனஸ் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து, மாலை 6:00 மணிக்கு பதில் தெரிவிப்பதாக கூறினார்.
இதற்கு, மாலைக்குள் பதில் கிடைக்காவிட்டால் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காலை 11:45 மணிக்கு அனைவரும் பணிக்கு திரும்பினர்.
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்