எஸ்.எஸ்.எம்.பி. விருதுகள் பிரிவில் பி.எஸ்.ஜி. கட்டடங்கள் ‘டாப்’ விருது

கோவை: பி.எஸ்.ஜி. அறக்கட்டளைக்குச் சொந்தமான இரண்டு கட்டடங்கள், 2026-ம் ஆண்டுக்கான ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்ஸ் அண்ட் மெட்டல் பில்டிங்ஸ் (எஸ்.எஸ்.எம்.பி.) விருது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளன.

மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ‘ஸ்டீல் கன்ஸ்ட்ரக்ஷன் எக்ஸ்போ ஆசியா 2026’ நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் 'ஏ' பிளாக் விரிவாக்கம், ஹாஸ்பிடல் டிசைன் பிரிவிலும், பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் சென்டர், ஸ்டேடியம் அண்ட் கன்வென்ஷன் சென்டர் பிரிவிலும் முதலிடம் பெற்றன.

பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் 'ஏ' பிளாக் கட்டடத்தில், பழைய கட்டமைப்பை பாதிக்காமல் கூடுதல் தளங்கள் அமைக்கப்பட்டன. 2022-ல் கட்டி முடிக்கப்பட்ட பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் சென்டரில் 1,500 பேர் அமரும் வசதியுடன், அர்மாடில்லோ விலங்கின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

Advertisement