இந்துஸ்தான் பள்ளி மாணவி உலக சாதனை

கோவை: பீளமேட்டில் உள்ள இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா, ஒற்றைக்காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

சிறு வயது முதலே யோகாசனங்களில் ஆர்வம் கொண்ட மாணவி, விருச்சிகாசனம், நடராஜாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை ஒற்றைக்காலில் நின்றபடி செய்து அசத்தினார்.

இந்த சாதனையை, சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மாவட்டத் தலைவர் பாலமுரளி கிருஷ்ணா கண்காணித்தார். சாதனை படைத்த மாணவிக்கு சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மாணவியின் சாதனையை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, பள்ளி முதல்வர் செண்பகவல்லி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Advertisement