போதை மாத்திரை இருவர் கைது
கோவில்பாளையம்: கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி.பவன் குமார் மேற்பார்வையில், கோவை மாவட்டம் முழுவதும், நேற்று சிறப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவில்பாளையத்தில் சத்தி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் 100 போதை மாத்திரைகளும், 600 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், தரன், 20. தனியார் உணவு நிறுவன விநியோக ஊழியர். அக்ரஹார சாமகுளத்தை சேர்ந்த விக்னேஷ், 25ங என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளது. கோவில்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
-
குழாய் உடைந்து சேதம்: வீணாகி வரும் குடிநீர்
-
ஆமை வேகத்தில் வடிகால் பாலம் பணி சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
-
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தேர்வு
-
ஜல்லி பெயர்ந்ததால் பாடாவதியான சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
-
ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்
Advertisement
Advertisement